.jpg)
இருங்காட்டுகோட்டையில் நடந்துகொண்டிருக்கும் கார்பந்தயம் பார்முலா-3 இல் வா-டீல் டைட்டில் லோகோவை இன்று(16-02-2014) காலை வெளியிட்டார்கள்.இப்படியொரு புதுமையான முறையில் லோகோ லாஞ்ச் செய்ததற்கு காரணம் என்னவென்றால்
இப்படத்தில் கார்,பைக் ரேஸ் போன்ற அம்சங்கள் கதைக்குள் இருப்பதாலும், ரேஸ் காரின் வேகம் போல் திரைக்கதை அமைந்திருப்பதாலும், சென்டிமென்டாக இருக்கும் என்பதற்காக வித்தியாசமான முறையில் "வா-டீல்" டைட்டில் லோகோவை வெளியிட்டார்கள்.
இந்தியாவில் வளர்ந்து வரும் கார் பந்தய வீரர் "Mihir Dharkar" ஒட்டிய கார் நம்பர் 9-இல் வா-டீல் லோகோ பொருத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அருண்விஜய், இயக்குனர் சிவஞானம், கேமராமேன் கோபி ஜெகதீஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் M.ஹேமந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விறுவிறுப்பாக நடந்த வா-டீல் படபிடிப்பின் கடைசி நாளன்று பூசணிக்காய் உடைத்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, படபிடிப்பை நிறைவு செய்தனர்.
மிகவிரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.
நடிகர்கள்
அருண்விஜய், கார்த்திகா, சதீஷ், சுஜா வாருணி, ஜெயபிரகாஷ், கல்யாண், வம்சி, ரேணுகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் - சிவஞானம், ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன், இசை – தமன்,
பாடல்கள் – விவேகா, எடிட்டிங் – பிரவீன், ஸ்ரீகாந்த், ஸ்டண்ட் – ராஜசேகர், கலை – மோகனமகேந்திரன், தயாரிப்பு நிர்வாகம் – அஸ்ரப் & ஹக்கீம், தயாரிப்பாளர் – M. சுசில்மோகன், ஆர்த்தி அருண், & M. ஹேமந்த்.
No comments:
Post a Comment