"ஒரு ஊர்ல ரெண்டு ராஜா"
டைட்டிலில் வர்ற இரண்டு ராஜாவில் விமல் முதல் ராஜா, இரண்டாவது ராஜா சூரி. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ரயிலில் விமல், சூரி, ப்ரியாஆனந்த் மூவரும் சந்திக்கிறார்கள். அப்போது நடக்கும் ஒரு சம்பவம், அவர்களின் வாழ்கையையே மாற்றுகிறது. கதை தண்டவாளத்திலிருந்து இறங்கி கார் பயணம், துரத்தல், காதல், கலகலப்பு, விறுவிறுப்பு என கதை ஓட்டம் மூவரின் இலக்கை அடைய வைக்கிறதா... இல்லையா... என்பதே கதையின் சுவாரஸ்யம்.
ப்ரியா ஆனந்த் மெடிக்கல் ஸ்டுடென்டா நடிக்கிறாங்க. லூசு பெண், வாயாடி, ஹீரோவோட இரண்டு மூன்று பாட்டுக்கு ஆடிட்டு போற வழக்கமான ஹீரோயினா இதில் இல்லாமா, ஒரு ஊர்ல இரண்டு ராஜா, ஒரு ராணி என்று சொல்லும் அளவுக்கு கேரக்டரில் அழுத்தம் உள்ளது.
முதல் கட்ட படப்பிடிப்பை மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் நடத்துகிறோம். பயணம் என்பதே சுவாரஸ்யமானது தான். அதிலும் ரயில் பயணம் அலுக்காதது. சின்ன பிள்ளைகளுக்கு ரயில் தரும் சந்தோசத்தை போல அனைத்து வயது உள்ளவர்களுக்கும் இப்பயணம் ஒரு இனிய சுகத்தை அளிக்கும். என்னுடைய சினிமா பயணத்தில் இது முக்கிய பயணமாக இருக்கும். நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வேலை செய்யும் டி.இமானும், நான்காவது முறையாக என் படங்களுக்கு தோள் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் P.G.முத்தையாவும் எனது இரண்டு தண்டவாளங்கள்.
விமல் – பிரியாஆனந்த் காதல் இதில் கவிதையாக இருக்கும். இரண்டே நாளில் நடக்கிற கதையில், பார்த்ததும் காதல் என்றால் செயற்கையாக இருக்கும். அதனால் யதார்த்தத்தின் எல்லை மீறாமல், இருவருக்கும் இடையிலான காதலில் நாகரீகம் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தது என்று வைரமுத்து சார் எழுதிய வார்த்தைக்கு உதாரணமாக இருக்கும்.
என் படங்களில் அரிவாளால் வெட்டுகிற ஆளையோ, பெண்ணிடம் வன்முறை செய்யும் வில்லன்களைப் பார்க்க முடியாது. ராமாயணம், மகாபாரதத்தில் 'இவர்தான்' வில்லன் என்று யாரையும் சொல்ல முடியாது என்பது என் கருத்து. இந்தப் படத்தில் அப்படியொரு கேரக்டர் தான் நாசருக்கு. தொழிலதிபரான இவர், சுயநலவாதியாக இருப்பார். அது வில்லத்தனம் மாதிரி தெரியுமே தவிர வில்லன்னு சொல்ல முடியாது.
இப்படத்தில் தம்பிராமையா, சிங்கம்புலி, சாஷா, சுருதிரெட்டி, அனுபாமாசுப்பிரமணியம் ஜோஸ்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இக்கதைக்காக சுமார் ஒன்றரை வருடங்கள் எடுத்துக் கொண்டேன், என்று இப்படத்தை பற்றி டைரக்டர் கண்ணன் கூறினார்.

No comments:
Post a Comment