Monday, March 17, 2014

8 ஆம் நூற்றாண்டையும் 21 ஆம் நூற்றாண்டையும் இணைக்கும் உத்தம வில்லன்

கமல் ஹாசனின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது அனைவரும் அறிந்ததே. அதே போல் சில நாட்களுக்கு முன் வெளியான உத்தம வில்லின் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

படத்தின் கதைக்கரு என்னவாக இருக்கும் என ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு இதோ அப்படத்தின் கதைக்கரு...

'உத்தமன்' என்ற 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

மனோரஞ்சனைக் கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய குருவாக சினிமா இயக்குனராக கே. பாலசந்தர் நடிக்கிறார்.

மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள்.

8ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் நடக்கும் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆன்ட்ரியா ஜெரமியாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசர், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் முக்கிய கதாபாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதன் மூலம் 8 ஆம் நூற்றாண்டையும் 21 ஆம் நூற்றாண்டையும் இணைக்கு ஒரு புது முயற்சி படமாக உத்தம வில்லன் இருக்கும் என எதிர்பார்க்க படுகின்றது ...

No comments:

Post a Comment