Monday, March 17, 2014

கல்விதான் பள்ளிக்கூடம் போகாமலே படத்தின் கரு


பெஸ்ட் ரிலீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டாக்டர்.S.E.P தம்பியுடன் இணைந்து எஸ்.மகேஷ் தயாரிக்கும் படம் "பள்ளிக்கூடம் போகாமலே"

இந்த படத்தில் கணேஷ்வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கிறார். அசிஸ்டென்ட் கமிஷ்னர் வேடத்தில் தோன்றும் கணேஷ் வெங்கட்ராம் பேசும் ஒவ்வொரு வசனமும் தியேட்டரில் அதிர்வலையை ஏற்ப்படுத்தும் அளவிற்கு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீஹரி மனோதத்துவ டாக்டராக நடித்திருக்கிறார்.அவர் இறப்பதற்கு முன்பு முழுமையாக நடித்துக்கொடுத்த படம் இது.

இளம் கதாநாயகனாக தேஜாஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார்.இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்த வில்லன் அலெக்ஸ் அவரின் மகன் ஆவார். இவர் அறிமுகமாகும் முதல் படம்இது. கதாநாயகியாக ஐஸ்வர்யாராஜா அறிமுகமாகிறார். இவர் கேரளாவில் சென்ற ஆண்டு +2 தேர்வில் 1200 க்கு 1200 மார்க் பெற்று பலரது பாராட்டு பெற்றவர். வில்லனாக புலவர் புலமைபித்தன் பேரன் திலீபன் அறிமுகமாகிறார்.மற்றும் ராஜ்கபூர் எ.வெங்கடேஷ்,ஓ.எ.கே.சுந்தர்,தேவதர்ஷினி,ஸ்ரீரஞ்சனி,பயில்வான்ரங்கநாதன்,நெல்லை சிவா சிங்கபூர் துரைராஜ்,ரயில்ரவி,ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - U.K.செந்தில்குமார் , இசை - சாம்சன் கோட்டூர்

பாடல்கள் - நா.முத்துகுமார், விவேகா,தாணுகார்த்திக்,ஜெயசீலன்.

நடனம் - காதல்கந்தாஸ், ராஜுசரபையா,ஹபீப்

தயாரிப்பு மேற்பார்வை - T.V.சசி , நிர்வாக தயாரிப்பு - திவ்யா நீருகட்டி

இனைதயாரிப்பு - எஸ்.மகேஷ்

தயாரிப்பு - Dr.S.E.P.தம்பி

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் - ஜெயசீலன்.

அவரிடம் படம் பற்றி கேட்டோம்...கல்விதான் பள்ளிக்கூடம் போகாமலே படத்தின் கரு! ஆசிரியர் போடும் மார்க் மட்டுமே கல்விக்கான தகுதி கிடையாது...தேர்வில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் பலர் உண்டு.மார்க் மட்டுமே வாழ்கையை தீர்மானித்து விடுவதில்லை கல்வி உயிரை விட பெரிதல்ல தோல்வி என்பது மனிதனின் வாழ்க்கைப் பாடமே தவிர அதுவே வாழ்கையின் முடிவு கிடையாது என்கிற கருத்தை உள்ளடக்கிய கதை!

தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் மனநிலையை இந்தப் படம் போற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்றார் ஜெயசீலன்.

No comments:

Post a Comment