Wednesday, March 5, 2014

குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் சைவம்

இயக்குனர் விஜய் தமிழ் திரை உலகின் இயக்குனர்களில் தனி தன்மை உடையவர் . 

விஜய் தன்னுடைய படங்களில் தன்னுடைய முந்திய படத்தின் சாயல் இல்லாமல் இயக்குவது தன்னுடைய பிரத்தியேக பாணியாக பின்பற்றுகிறார் . முதல் படமான கிரீடம் முதல் தற்போது தயாரிப்பில் இருக்கும் 'சைவம்' வரை , தன்னுடைய அடிப்படை பாணியான குடும்ப பிண்ணனியை கையாண்டு வருகிறார்.


' சைவம் முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாகும். நமது குடும்ப வேர்களை பற்றிய கதை இது ....நமது முன்னோர்களின் படங்கள் நம் வீட்டில் தொங்குவதன் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் கதை ..... 

நாசர் சார் தன்னுடைய வாழ் நாள் சாதனையாக இந்த படத்தை எடுத்துக் கொள்ளலாம் . அந்த குட்டி தேவதை சாரா , தெய்வ திருமகள் படத்தில் இருந்ததை விட பல மடங்கு உயரத்தை நடிப்பால் இந்த படத்தில் தொட்டு இருக்கிறார் . லுதுப் என்கிற பாஷா என்கிற பெயரில் அறிமுகமாகும் நாசர்- கமீலா நாசர் தம்பதியரின் மகன் இந்த படத்தில் ரகளை படுத்தி இருக்கிறார் . அவருடைய உற்சாகம் திரையிலும் தெறிக்கும் என்று நம்புகிறேன். 

இசை அமைப்பாளர் ஜி. வீ . பிரகாஷ் மற்றும் ஒளிபதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் என்னுள் இணைந்த , என்னுடைய மன ஓட்டத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன். 

ஒரு படத்தின் இறுதி கட்ட பணிகள் ஆற்றும் போதே அடுத்த படத்தை பற்றி நாங்கள் விவாதிக்க தொடங்குவோம்.அதுவே நாங்கள் தொடர்ந்து பணியாற்றும் ரகசியம் . ' சைவம் ' இந்த கோடை காலத்தில் குளிர்ச்சி ஊட்டும் ஒரு இனிய தென்றலாக வலம் வரும். 

இந்த தலைப்பு எந்த ஒரு கலாச்சாரத்தை பற்றியதோ , வழக்கத்தை பற்றியதோ அல்ல .... கதையின் மைய கருத்தை பற்றியது ' என்று கூறுகிறார் இயக்குனர் விஜய்.

No comments:

Post a Comment